அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
சிகாகோவில் இளைஞர் ஒருவர் 2 வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரான குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.