கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.