Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 வயது சிறுவனை காணவில்லை - உதவி கோரும் பொலிஸார்

13 வயது சிறுவனை காணவில்லை – உதவி கோரும் பொலிஸார்

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் தாயார் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 16 ம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் மடுல்சிமை றோபேரி தோட்டத்தில் 19 வது லயன் குடியிருப்பில் தனது பாட்டியுடன் வசித்து வந்த விஜேகாந்த் சசிதரன் என்ற சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16 ம் திகதி குறித்த சிறுவன் அறநெறி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை எனவும் இதுவரை சிறுவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே கீழே உள்ள புகைப்படத்தில் காணும் சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தால் அல்லது எங்கேனும் கண்டால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு மடுல்சிமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி H.P. திஸாநாயக்க தெரிவித்தார்.

தொலைபேசி இலக்கங்கள்

 0718591514

 0757845006

0552263822

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles