சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சுகாதார சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளில் பயன்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.