Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளத்தில் படகு - வலைகளை தீக்கிரையாக்கிய மர்ம நபர்கள்

புத்தளத்தில் படகு – வலைகளை தீக்கிரையாக்கிய மர்ம நபர்கள்

புத்தளம் தமிழர் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் படகு மற்றும் வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

இதனால் இரண்டு கோடி ரூபா நட்டம் என தெரிவிக்கப்படுகினது.

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் செல்வநாதன் சொக்கலிங்கம் என்பவருக்குச் சொந்தமான படகு, இயந்திரம், 3 வல்லங்கள் மற்றும் 4 வலைகளுக்கு இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் படகு, இயந்திரம், ஒரு வல்லம், 4 வலைகளும் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும், ஏனைய 2வல்லங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட படகு, இயந்திரம், வல்லங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெருமதியானவை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒருமாதக் காலமாக தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் குறித்த நாசகார வேலையை சிங்களவர்கள் செய்திருக்கலாமெனவும் சந்தேகிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையிகும் எவறும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாராணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles