Monday, May 20, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனி இறக்குமதி மோசடி: பணத்தை மீள பெறுமாறு அறிவுறுத்தல்

சீனி இறக்குமதி மோசடி: பணத்தை மீள பெறுமாறு அறிவுறுத்தல்

சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

நிதியமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5 சதவீதம் குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசாங்க நிதிப்பற்றிய குழு முன்னதாக அதிருப்தி வெளியிட்டிருந்தது.

குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் ஒரு சில பாரிய நிறுவனங்கள் அனுகூலம் பெறுவதற்கு இடமளித்தமையை தடுப்பதற்கு எந்தவொரு பொறுப்புக்கூறும் முறைமையும் செயற்படுத்தப்படவில்லை எனவும் அந்த குழு சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தநிலையில், சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.

Keep exploring...

Related Articles