Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் உள்ள அபாயகர கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

கொழும்பில் உள்ள அபாயகர கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் அவற்றை சீர்செய்ய அல்லது அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர்ருவன் விஜயமுனி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, கெத்தாராம பரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகஸ்யாய அபயரம் மூன்று மாடி வீடுகள் உட்பட 06 அடுக்குமாடி குடியிருப்புகள் அதில் அடங்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles