பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வேல்ஸ் இளவரசி கேட், வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், ஆனால் இன்னும் சில வாரங்களுக்கு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு அவர் அரச விவகாரங்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க நேரிடும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.