களுத்துறை சிறைச்சாலையில் மேலும் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (18) அவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை மொதரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைதி கடந்த 14ஆம் திகதி சுகயீனம் காரணமாக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வார்டு இலக்கம் 03 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 9 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் என தெரியவந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் களுத்துறை சிறைச்சாலையில் 4 நாட்களில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர்.