கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் குழுவுடன் நேற்று (17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் கராப்பிட்டிய புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் பல கனிஷ்ட ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.