Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டு520 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

520 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நேற்று (16) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த வீட்டில் இருந்து 520 சட்டவிரோத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாக குறித்த மாத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles