மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் பிரதான வீதியில் குருக்ளமடம் கிராமத்தில் நேற்று (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறியும், களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மண்டூரைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.