Thursday, May 29, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு

இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட கரு சரு திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக இடைக்காலத் துறை வழிநடத்தல் குழு நேற்று (16) ஸ்தாபிக்கப்பட்டது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் துறைசார் குழுக்களை அமைப்பது தொடர்பாக நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரியும் அனைவரையும் பதிவு செய்து தரவு அமைப்பு ஒன்றை தயாரிப்பது தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை பரிசீலித்துஇ மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழில்சார் அமைப்பு இணையத்தின் ஊடாக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பயண நேரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles