VAT வரி 18% அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அதிகரிப்பின்றி பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சவர்க்காரம், கொலொன், பௌடர், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை VAT இன்றி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக லங்கா சதொச வாடிக்கையாளர்களுக்கு பல அத்தியாவசியப் பொருட்களை நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது.