நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேலும் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
வயதானவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் வெளியில் முகமூடிகளை அணிய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.