Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 10,000 ரூபா இலஞ்சமாக பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டது.

நேற்று (16) பிற்பகல் நாரம்மல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் நாரம்மல பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கசிப்பு விற்பனையை முன்னெடுப்பதற்காகவும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததற்கு சிறிய தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்வதற்காகவும் இலஞ்சம் பெறப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles