Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு தீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 34 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையிட்டபோது, அந்த சாக்குப்பையில் சுமார் 34 கிலோ எடையுள்ள 16 கேரள கஞ்சா பொதிகள் இருந்தன.

மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 13 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles