கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டென்ட் குழாய்களுக்கு தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், பல நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
“ஸ்டென்ட்” குழாய்கள் தட்டுப்பாடு காரணமாக இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.