ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிஹிஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நீதி நடவடிக்கைக்கு அமைய மோதர பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான சந்தேகநபர் வெபட, கணேபொல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.