அவலோகிதேஸ்வர போதிசத்வவாக காட்சியளித்த மஹிந்த கொடிதுவக்குவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரை அங்கொட மனநல வைத்தியசாலையில் முன்னிலைப்படுத்துமாறும், அவரது மனநல அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (15) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் திரு திலின கமகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சட்டத்தரணி சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.