செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா வோஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில் இதனை தெரிவித்தார்.
வளரும் நாடுகளின் இந்த தாக்கம் 40 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.