Monday, August 18, 2025
27.2 C
Colombo
வடக்குயாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை வழிமறித்து சோதனையிட்ட போது , இளைஞனின் உடைமையில் இருந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , திருட்டு சம்பவங்கள் சிலவற்றுடன் இளைஞனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles