Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிலிவரி போர்வையில் ஐஸ் விற்பனை செய்த நபர் கைது

டிலிவரி போர்வையில் ஐஸ் விற்பனை செய்த நபர் கைது

எடேரமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், வாடகைக் கார் சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் போர்வையில் மோட்டார் சைக்கிளில் உணவுப் பையில் மறைத்து போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (14) பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபரிடம் இருந்து 332 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், டுபாயில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ‘பொபி’ என்பவருடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles