Friday, February 27, 2026
30.6 C
Colombo
சினிமா'தக் லைஃப்' படத்தில் இணைந்தார் ஐஸ்வர்யா

‘தக் லைஃப்’ படத்தில் இணைந்தார் ஐஸ்வர்யா

கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது.

37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

நடிகர்கள் கௌதம் கார்த்திக் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக பட நிறுவனம் அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles