Tuesday, January 20, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை: விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் ரத்து

உயர்தரப் பரீட்சை: விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் ரத்து

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த பாடத்திற்கான புதிய
வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles