ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.