பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது 295 கிராம் ஹெரோயின், 685 கிராம் ஐஸ் மற்றும் 72 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான 19 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.