இலங்கையின் செல்வந்த வர்த்தகர்களிடம் இருந்து பல கோடி ரூபாவை பெற்றதாக கூறப்படும் திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் வெளிநாட்டு வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
திலினி பிரியமாலி வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கை மனு நேற்று (10) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் அதனை நிராகரித்துள்ளார்.
பிரியமாலிக்கு எதிரான 5 வழக்குகள் நேற்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மேலதிக அறிக்கைகளுக்காக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.