காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக சிறைச்சாலைகள் திணைக்களம் அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, நான்கு நோயாளிகள் குணமடைந்துள்ளனர் மற்றும் சிறைச்சாலையின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.