Tuesday, April 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடமை நேரத்தை புறக்கணிக்கும் அரச ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடமை நேரத்தை புறக்கணிக்கும் அரச ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும்.

சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை பொருட்படுத்தாமல் வந்து செல்வதை அவதானித்ததையடுத்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றறிக்கையின்படி, அரசு அலுவலகங்கள் பிற்பகல் 3:00 மணி வரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், சீருடைப் படிகள் பெறும் அனைத்து அரசு அலுவலர்களும் பணிக் காலத்தில் அலுவலக அடையாள அட்டையை அணிந்து, சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை வேளையில் அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் தங்கியிருப்பது அவசியம் என சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நிறுவனத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு நிறுவனங்களின் விசாரணைச் சாளரங்கள், பணம் ஏற்றுக்கொள்ளும் சாளரங்கள், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சாளரங்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும்.

அங்கவீனமுற்ற வாடிக்கையாளர்கள் அலுவலகங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles