யுக்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – குச்சிவேலி பொலிஸாரினால் நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் மீட்கப்பட்டுள்ளது.