Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுபெப்ரவரியில் இலங்கை அணி மீதான தடை நீங்கும் - ஹரின் எதிர்பார்ப்பு

பெப்ரவரியில் இலங்கை அணி மீதான தடை நீங்கும் – ஹரின் எதிர்பார்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (11) பிற்பகல் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்து வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் உடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறான குறிப்பை தெரிவித்ததாக அவர் குறிப்பிடட்டார்.

ஐ.சி.சி. அடுத்த செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதால், இலங்கையின் தடையை நீக்குவதற்கு ‘Zoom’ ஊடாக விசேட செயற்குழு கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இலங்கை இழக்க நேரிடும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles