சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் முக்கிய நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தின் சமீபத்திய போக்குகளை ஆய்வு செய்வதாகும்.