அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது 14 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும கொடுப்பனவை பெறும் நிலையில், 11 இலட்சத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 60 வீதமானவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த வருடம் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.