Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுTIN இலக்கத்தை பெறும் வசதியை விரிவுப்படுத்த நடவடிக்கை

TIN இலக்கத்தை பெறும் வசதியை விரிவுப்படுத்த நடவடிக்கை

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிப் பதிவு இலக்கம் அல்லது TIN இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறையான முறைமையொன்று தயாரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி பிரதேச செயலகத்தினூடாக TIN இலக்கத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்று நிறைவடையவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நாட்டு மக்களின் தரவுகளை உள்ளடக்கிய அரச நிறுவனங்களின் ஊடாக TIN இலக்கத்தை விரைவாக வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.

வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles