Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உலகம்4 வயது மகனை கொன்று சூட்கேஸில் எடுத்து சென்ற தாய் கைது

4 வயது மகனை கொன்று சூட்கேஸில் எடுத்து சென்ற தாய் கைது

இந்தியாவில் தாயொருவர் தனது 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கணவருடன் விவாகரத்து பெற்றுள்ள அவர், தந்தை – மகன் சந்திப்பை தடுப்பதற்காக குறித்த சிறுவனை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பட்டதாரியான குறித்த பெண் (39), தனியார் நிறுவனமொன்றின் உயரதிகாரியாக பணியாற்றுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகனை கொன்று சடலத்தை சூட்கேஸில் அடைத்து கோவாவிலிருந்து பெங்களூருக்கு எடுத்து செல்லும் வழியில் அவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

மகனுடன் கோவாவில் விடுதியொன்றில் தங்கியிருந்த அவர், திடீரென தனது மகன் உறவினர் வீடொன்றில் இருப்பதால் அங்கு செல்வதற்கு வாடகை கார் ஒன்றை ஆயத்தப்படுத்தி தருமாறு விடுதி நிர்வாகத்திடம் கோரியுள்ளார்.

அதற்கமைய, அவர் விடுதியை விட்டு வெளியேறியதையடுத்து, அதனை தூய்மையாக்க சென்ற பணியாளர் அங்கு இரத்தக் கறை இருப்பதை அவதானித்துள்ளதுடன், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த வாடகை காரின் சாரதியை தொடர்பு கொண்டு, சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.

அவரது சூட்கேஸை சோதனையிட்ட போது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles