2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று இலங்கை தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் – நிகோசியா, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இவ்வாறு மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இந்த இலங்கை தூதரகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.