Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மதுபானம் - கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

சட்டவிரோத மதுபானம் – கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

யாழ்ப்பணம் – கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய தினம் பொலிஸாரினால் அவரது வீடு சுற்றிவளைகப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது குறித்த நபரின் வீட்டில் இருந்து 100 கிராம் கஞ்சாவும், 10 லீற்றர் கசிப்பும், 21,700 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, ஒரு கிராம் 800 மில்லி கிராம் கொண்ட கஞ்சாவை பொட்டலமாக கட்டி, அந்த பொட்டலத்தை 700 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles