வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு 06 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து நாற்காலியை எடுத்துக்கொண்டு 8 ஆவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.