Thursday, May 22, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்5 ஆவது முறையாக பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா

5 ஆவது முறையாக பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா

அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக மீண்டும் பங்களாதேஷ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பியிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

350 ஆசனங்களைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நேற்று (07) அவாமி லீக் கட்சி 152 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடிந்தது.

அதன்படி, அவாமி லீக் கட்சிக்கு பங்களாதேஷில் மேலும் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை வழங்க அந்நாட்டு வாக்காளர்கள் முடிவு செய்திருந்தனர்.

நேற்று (07) நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு முன்னதாகவே தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன.

ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தில் நியாயமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்று நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சி தேர்தலைப் புறக்கணித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles