பெலவத்தை – நெலுவ வீதியில் தபால் 09 பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்த குறித்த சிறுவன் உயிரிழந்ததுடன், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளனர்.
யத்தபான – கன்வன்வ பிரதேசத்தை சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மேகத்தன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.