சமூக வலைதளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மாலைத்தீவு அரசாங்க அமைச்சர் மற்றும் இரண்டு பெண் அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமரின் லட்சத்தீவு பயணம் தொடர்பில் குறித்த அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மாலைத்தீவு அமைச்சரின் இந்த பதிவின் மூலம் இந்தியாவுக்கும் – மாலைத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.