எதிர்காலத்தில் மதுபானசாலை ஒன்றை ஆரம்பிக்கும் போது ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுவரி உரிமங்களை வழமையான முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதுவரை மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் போது அடிப்படைக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
சுற்றுலாத்துறையுடன் உரிமம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நம்புவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.