கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் தட்டம்மை நோயின் மேலதிக டோஸ் பெறாத 800க்கும் மேற்பட்டோர் இருப்பதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தட்டம்மை ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள போதிலும், கடந்த வருடத்தின் கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் 700க்கும் அதிகமான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்டுள்ள 09 மாவட்டங்களில் 06 தொடக்கம் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு மேலதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
இதன்படி, கொழும்பு மாநகர சபை பகுதியில் தட்டம்மை கூடுதல் டோஸ் திட்டத்தில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட 1,268 குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.