Friday, January 17, 2025
24.3 C
Colombo
அரசியல்ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் - ஜனாதிபதி

ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் – ஜனாதிபதி

அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்க முன்னோடியாகப் பணியாற்றியவர் மறைந்த டி.பி. ஜயதிலக்க முன்னெடுத்தது போன்ற வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் கவனம் செலுத்தி ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் 1898 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அனகாரிக தர்மபாலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்பகாலத் தலைவராக டி.பி. ஜயதிலக தெரிவு செய்யப்பட்டதோடு நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பௌத்த அமைப்பாக கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் நாட்டிற்கான பரந்த நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றது.

’ஒரே இலங்கைக்கான கருத்தாடல்’என்ற தொனிப்பொருளில் இவ்வருட ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், 10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பிரதானிகள் , ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles