Tuesday, April 14, 2026
30 C
Colombo
வடக்கு15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

மட்டக்களப்பு – காத்தான்குடி – புதுகுடியிருப்பு பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று (06) குறித்த சிறுமியை (15) 26 வயதுடைய ஒருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்து அங்கு அவரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி உறவினரிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்களான அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இருவரும் 32 வயதுடைய ஒருவரையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles