காலியை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களும் படகும் தற்போது காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் அளவு குறித்து கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.