Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அனுர மங்கள் குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் டீமோ பட்டாவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டீமோ பட்டாவில் சென்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles