தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், சரியான நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்க தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று (04) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்தப் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்காக போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பல வேட்பாளர்கள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சியும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.