காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்துஇ சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய சிறைச்சாலையின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்இ சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடு மற்றும் புலனாய்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி காலி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய கைதிகளை அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.